வயலினும் தந்தியும்
ஊடல் கொண்டால்
இசைக்கு எங்கு போவது?
மூங்கிலும் காற்றும் ஊடினால்
மனம் மயக்கும்
கானத்திற்கு எங்கே போவது?
வானும் கடலும் ஊடினால்
மழைக்கு எங்கு
மனு செய்வது?
மனமும் தனமும் ஊடினால்
பச்சிளம் குழந்தை
பாலுக்கு எங்கு போகும்?
குரலும் காற்றும் ஊடினால்
வாய் மொழிக்கு எங்கே போவது?
மேல் இமையும்
கீழ் இமையும் ஊடினால்
உறக்கத்தை எங்கே
உற்பத்தி செய்வது??
No comments:
Post a Comment