Thursday, April 25, 2013

சாமீ......


எங்கள் ஊருக்கு புதிதாய் ஒரு சாமியார் வந்திருந்தார். அவர் மிகவும் நல்ல சாமியார் என்று மக்கள் வெள்ளம் போல் அவர் ஆசிரமத்தில் குவிந்தனர். அவரும் நல்லபடியாகவே மக்களின் குறைகளை போக்கி வந்தார். மக்கள் அனைவரும் அவரை அன்புடன் "சாமீ" என்றே அழைத்து வந்தனர். அவர் சில வியாதிகளை மருந்தில்லாமல் குணமாக்குவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், எதையும் பரிசோதித்து பார்க்கும் என் மனது அவரையும் சோதிக்க நினைத்தது. ஒருநாள் அவருடைய ஆசிரமத்திற்கு சென்றேன். அவர் என்னைப் பார்த்து மர்மப் புன்னகை பூத்தார். நான் அதை அலட்சியம் செய்துவிட்டு, அவரைப் பற்றி துருவ ஆரம்பித்தேன். அவர் என்னை கை அமர்த்திவிட்டு, அவரோடு என்னை வரச் சொன்னார்.

அவர் என்னை அழைத்துக்கொண்டு நேராக என் வீட்டிற்கு வந்தார். என் வீடு எப்படி தெரியும் என்ற என் கேள்விக்கும் மர்மப் புன்னகை மட்டுமே  பூத்தார். என் மனைவி அவரை எதிர்பாராததால் சற்று ஆச்சரியம் அடைந்தாலும் எங்களை வரவேற்றாள். நான் அவளிடம் எனக்கு காபியும் அவருக்கு மோரும் கொண்டு வரச் சொன்னேன்.

சிறிது நேரம் கழித்து, அவள் மோர் மட்டும் கொண்டுவந்தாள். நான் சொன்னது காதில் விழவில்லை என நினைத்து மீண்டும் சொன்னேன். அவள் நான் சொன்னதை காதில் வாங்கியவளாக ஏன் நான் இருப்பதையே உணரவில்லை. திடிரென எனக்கு சந்தேகம் வர, என் வீட்டு கண்ணாடியில் என்னை பார்க்கிறேன்.. I did not "saw me".......................