மலையின் மகனே
மயில் வாகனனே
வள்ளி மணாளா
வாசவன் மருகா
கமலத்தில் தவழ்ந்து
குவலயம் காத்த
குன்றின் கோவே
ஆறாய் பிறந்து
ஆறாய் ஒலித்த
ஆரா அமுதே
சக்திவேல் ஏந்தும்
சண்முகவேளே
இத்திரு நாளில்
உத்தர நாளில்
உந்தன் பொற்பாதம்
பணிந்தடி பாேற்றுகின்றோம்...