Thursday, January 11, 2018

ஏண்டியம்மா எந்திரிச்ச??

அப்பனுக்கு வேலை 8 மணி
அண்ணனுக்கு ஸ்கூல் 7 மணி
அவுகள கிளப்ப
அஞ்சு மணிக்கு நான் எழுந்தால் - நீ
ஏண்டியம்மா எந்திரிச்ச??

உஞ்சோட்டு பிள்ளையெலாம்
பனிரெண்டு மணிநேரம் தூங்கணும்னு சொல்றாக
நீ தூங்கி
எட்டு மணி நேரம்கூட ஆகலேயே - நீ
ஏண்டியம்மா எந்திரிச்ச??

அவுகள கிளப்பவே
ஆளாப் பறக்கிறேன், நீயும் எந்திருச்சா
உன்னை யாரு பாப்பாக - நீ
ஏண்டியம்மா எந்திரிச்ச??

சீக்கிரம் எந்துரிச்சு சமையல் செய்கயில
பரிட்சைக்கு படிக்க எந்திரிச்ச நெனப்பு வந்து
பாவி மனம் கலங்கிவிடும்
ரசத்துக்கு உப்பாக என் கண்ணீரு
ருசி குடுக்கும்
இப்படி நான் கலங்கையில - நீ
ஏண்டியம்மா எந்திரிச்ச??

மாசத்துல மூணுநாளு முடியாத வேலையில
முன்நின்னு உதவுறேன்னு முன்னாடி சொன்னாக 
என்னோட நேரம்; அந்த நாளில
ப்ராஜெக்ட், டெட் லைனு
பொசுக்குன்னு கிளம்பி நின்னு
போய் வரவா-னு கேப்பாக

டாக்டர் கிட்ட போய் நின்னு
நீ தூங்க மருந்து கேட்டா
ஏளனமா சிரிச்சுகிட்டே
குதர்க்கமா யோசிப்பாரு
....................................................
இருந்தாலும் வேற வழி தெரியலியே
நீ ஒழுங்கா தூங்குறதுக்கு ...


ஆசிரியர் குறிப்பு :

காலையில் கணவனையும் குழந்தையையும் கிளப்பும் அனைத்து இல்லத்தரசிகளுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்..




No comments: