Thursday, October 20, 2016

டாட் (.)

அந்த டாட்டூ கடையின் முன்பு தனது புல்லட்டை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு உள்ளே சென்றான் அந்த இளைஞன். அவனது காதலி பெயரை தன் புஜத்தில் டாட்டூ போடவேண்டும் என்றான். அதற்கு அந்த கடைக்காரர் சரியென்றதும், ஒரு கண்டிஷன் என்றான். அந்த டாட்டூவை  என் காதலிதான் முதலில் பார்க்கவேண்டும். ஆகவே நான் அதை பார்க்காமல் மறைத்து வைத்து டாட்டூ போடவேண்டும் என்றான் .


இரவு 11:55, தன் காதலிக்காக காத்துக்கொண்டு இருந்தான் அவன். துணி சுற்றிய தன் புஜத்தை அடிக்கடி ஆசையோடு தடவிக்கொண்டு. அவள் வந்தாள். என்ன கையில் கட்டு என்றாள்  பதட்டத்தோடு. அவளை ஆசுவாசப்படுத்திவிட்டு, "உன் பெயரை என் புஜத்தில் டாட்டூ போட்டு உள்ளேன்" என்றான். மேலும் அதை அவள்தான் முதலில் பார்க்கவேண்டும் என்றும் தானே இன்னும் பார்க்கவில்லை என்றும் சொன்னான் .

சந்தோஷத்தில் பூரித்துப்போனாள் அவள். இரவு 12 மணி ஆனதும் "ஹாப்பி பர்த்டே" பாடிக்கொண்டே , புஜத்திலிருந்த துணியை அவிழ்த்து அவளிடம் காட்டினான். அவள் அதை பார்த்தவுடன், முகத்தில் இருந்த சந்தோசம் மறைந்து கோபம்,  அழுகை என்று மாறியதோடு அவனை கன்னத்தில் அறைந்து விட்டு "பிரேக் அப்" என்று கூறிவிட்டு அழுது கொண்டே சென்றுவிட்டாள். நடப்பது என்னவென்றே புரியாமல் தன் புஜத்தை பார்த்து  அதிர்ந்து விட்டான்.

அவன் தன் காதலி பெயரை டாட்டூ போட சொன்னபொழுது அவனிடம் விலையை குறைக்க சொல்லி 10 நிமிடத்திற்கு பேரம்பேசியது ஞாபகம் வந்தது. அந்த கோபத்தில்  DEVI L என்ற பெயரை DEVIL என்று(டாட் இல்லாமல்) டாட்டூ போட்டு விட்டான். அதுவும் தான் பார்க்காதது அவனுக்கு வசதியாக போய் விட்டது என்று தன்னைத் தானே நொந்து கொண்டான்.

No comments: