எம் குலத்தார் நிற்கின்றனர்
என் முன்னே நாணி - காரணம்
நான் கம்பரின் எழுத்தாணி.
ஆதவ குலத்தில் உதித்த
மாதவனை பாடியதால் - நானும்
பார் புகழும் பிரம்ம ஞானி.
அழகைக் கூட்டும் பொன்ஆணி - நான்
அருளைக் கூட்டும் ஞானத் தோணி.
மற்றவை ஓலை கிறுக்கும் வேளை
மானிடரின் தலைக் கிறுக்கலை
சரிசெய்தது என் வேலை.
ராமன் கை பிடித்தது ஒரு ராணி - அக்கதை எழுத
கம்பர் கைக் கொண்டது ஒரு ஆணி...