Thursday, July 8, 2021

தூண்டில் புழு


பால்ய வயது 

வரும்வரை 

எனது தூக்கம் 

என் இமைகளுக்கு 

தூண்டில் வீசும்...


தூண்டில் புழுவாக 

ஒவ்வொரு பருவத்திலும் 

ஒவ்வொன்று...

அன்னையின் தாலாட்டு 

அணைக்கும் அப்பாவின் கரம் 

தலைக்கு மேல் சுழலும் காற்றாடி 

கதகதப்பான போர்வை 

இப்படிப் பல..


அவளைக் கண்ட நாள் 

என் தூக்கத்தின் 

தூண்டில் 

என் வசமானது...

ஆயினும் 

அதனைப் பிடிக்கும் 

தூண்டில் புழுதான் 

என்னவென்று 

தெரியாமல் 

திரிந்தலைந்தேன்...


பின்னொரு நாளில் 

தெளிந்து கொண்டேன் 

அப்புழுவே 

நான்தான் என்று...