Wednesday, November 14, 2018

என் கவிதைகள்

நறை வழியும் இதழோ
நரை  விழுந்த தலையோ - மனம்
சிறுகுழந்தை ஆயின் - வாழ்வில்
கறையேதும் படியா...



கார்காலத்தில் பூத்து குலுங்கும் மரத்தின் அடியில் நிறுத்தியதால்
கார்களுக்கெல்லாம் பூப்புனித நீராட்டுவிழா...


அலுவலக ஓசை
அடங்கியபின்னே
ஆன்மாவின் இசை
ஆரம்பமாகும்...



காலமெனும்
கல்மலையை
சில்லு சில்லாய் உடைக்கும்
உளிகள் தான்
கடிகாரத்தின் முட்களோ??!!


செயத்தக செய்யினும் நகைப்பர் சிறியர் பெரியோர்
பயனறிந்து புகழ்வர்.