Saturday, July 9, 2016

அரை நிமிடக்கதைகள்

கெ/கடுப்பு 

மானேஜர் கொடுத்த வேலையை இரவு முழுவதும் கண் விழித்து முடித்துவிட்டு, அதை சொல்ல காலை 6மணிக்கு போன் செய்தால் அவருடைய தூக்கத்தை கெடுப்பதாக கடுப்படித்தார்.....


விதிமுறை 

"ஏண்டா... நாப்பதை  தாண்டவே மாட்டியா??!!" கல்லூரி செல்லும் தன் மகனை முறைத்துக்கொண்டே கேட்டார் அப்பா.. "இல்லப்பா... இந்த ரோட்ல 40 km ஸ்பீட் லிமிட்ப்பா..."   போர்டை காட்டிக்கொண்டே சொன்னான் மகன் விவேகத்துடன்...



கெட்ட பழக்கம் 

"என்ன!!!???.. தம் அடிக்க மாட்டிங்களா ??... தண்ணி அடிக்க மாட்டிங்களா ??... இந்த காலத்துல ஒரு கெட்ட பழக்கம்கூட இல்லாத ஒரு ஆளா??" என எரிச்சல் வரும்படி கேள்வி மேல் கேள்வி கேட்டவனை பளாரென கன்னத்தில் அறைந்துவிட்டு சொன்னேன் "இது தான் என் கெட்ட பழக்கம்..."