எங்கள் வாழ்க்கை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நன்றாகவே போய்க்கொண்டு இருந்தது, அந்த நாள் வரும் வரை... திடீரென எங்கள் உலகம் ஒரு பெரிய கிரகத்தை நோக்கி சென்றது இல்லை... இல்லை.., அந்த மாபெரும் கிரகம் எங்கள் உலகத்தை தன்பால் இழுத்தது.
எங்கள் உலகம் அந்த கிரகத்தை நெருங்க நெருங்க.. எங்கள் உலகம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. நாங்கள் எல்லாம் குகைகளை நோக்கி ஓடினோம். குகைகளுக்குள் வர முடியாதவர்களின் மரண ஓலம் என் காதுகளுக்குள் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
எங்கள் உலகம் அந்த கிரகத்தின் மேல் மோதியது.
டமால் ..........
நான் மெல்ல கண் விழித்துப் பார்க்கிறேன். எங்கள் உலகம் சிதறுண்டு கிடக்கிறது. அந்த கிரகத்து உயிரினங்கள் தங்களுக்குள் பேசுவதிலிருந்து, எங்கள் உலகம் மோதியது, "ரஷ்யா" என்னும் நாட்டிலுள்ள ஒரு தாமிர தொழிற்சாலையின் மேற்கூரையின் மீது என்றும் தெரிகிறது.
அடுத்தது என்ன???..............