Friday, November 1, 2013

தப்பு

நான் ஒரு சொந்த விசயமாக தாம்பரத்தில் train-ஐ பிடிக்க லோக்கல் train-யில் கிண்டியிலிருந்து போய்க்கொண்டு இருந்தேன். நாங்கள் ஏறிய பெட்டியில் கானா பாடல் பாடும் குழு ஒன்று இருந்தது. அவர்கள் தங்களுடைய வாத்தியங்களில் practice செய்து கொண்டு இருந்தனர்.எனக்கு அவர்களருகில் உட்கார இடம் கிடைத்தது.

அவர்கள் பாடலுக்கு நான் என் கைகளில் தாளம் போட்டபடி ரசித்துக்கொண்டு இருந்தேன். அந்த குழுவில் இருந்த ஒருவர் என்னை அணுகி, நான் நன்றாக தாளம் போடுவதாக கூறி, அவருடைய "தப்பை" கொடுத்து அதில் ட்ரை பண்ண சொன்னார். நான் முடியாதென மறுக்க, அவர் என்னை ஆரம்பத்திலிருந்து கவனித்து வருவதாகவும், நான் மிகவும் நன்றாக கைகளில் தாளம் போட்டதாகக் கூறி என்னை வாசிக்க வற்புறுத்தினார்.

நான் என்னுடைய வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல், என்னுடைய தாத்தா, அந்நாளில் "டேப்" எனும் வாத்தியத்தில் வருடாவருடம் நிகழும் காமன் பண்டிகையில்* மதன் எறிந்தாரா ? இல்லையா? என்று    கச்சேரி செய்து இருக்கிறார் என்று சொல்லவும், அவர் இது தான் சமயமென அவருடைய "தப்பை" என் கையில் திணித்து எனக்கு பிறவியிலேயே அக்கலை வரும் என்று சொல்லி என்னை  வாசிக்கச்  சொன்னார்.

நானும் ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் வாசிக்க நினைத்து ஒரு விரலால் ஒரு தட்டு தட்டினேன்.. அவ்வளவு தான்..... அது டர்ரென கிழிந்து விட்டது......


*
காமன் பண்டிகை -
http://en.wikipedia.org/wiki/List_of_Indian_folk_dances#Kamandi_or_Kaman_Pandigai
http://www.hindu-blog.com/2010/02/kaman-pandigai-holi-in-tamil-nadu.html

Thursday, April 25, 2013

சாமீ......


எங்கள் ஊருக்கு புதிதாய் ஒரு சாமியார் வந்திருந்தார். அவர் மிகவும் நல்ல சாமியார் என்று மக்கள் வெள்ளம் போல் அவர் ஆசிரமத்தில் குவிந்தனர். அவரும் நல்லபடியாகவே மக்களின் குறைகளை போக்கி வந்தார். மக்கள் அனைவரும் அவரை அன்புடன் "சாமீ" என்றே அழைத்து வந்தனர். அவர் சில வியாதிகளை மருந்தில்லாமல் குணமாக்குவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், எதையும் பரிசோதித்து பார்க்கும் என் மனது அவரையும் சோதிக்க நினைத்தது. ஒருநாள் அவருடைய ஆசிரமத்திற்கு சென்றேன். அவர் என்னைப் பார்த்து மர்மப் புன்னகை பூத்தார். நான் அதை அலட்சியம் செய்துவிட்டு, அவரைப் பற்றி துருவ ஆரம்பித்தேன். அவர் என்னை கை அமர்த்திவிட்டு, அவரோடு என்னை வரச் சொன்னார்.

அவர் என்னை அழைத்துக்கொண்டு நேராக என் வீட்டிற்கு வந்தார். என் வீடு எப்படி தெரியும் என்ற என் கேள்விக்கும் மர்மப் புன்னகை மட்டுமே  பூத்தார். என் மனைவி அவரை எதிர்பாராததால் சற்று ஆச்சரியம் அடைந்தாலும் எங்களை வரவேற்றாள். நான் அவளிடம் எனக்கு காபியும் அவருக்கு மோரும் கொண்டு வரச் சொன்னேன்.

சிறிது நேரம் கழித்து, அவள் மோர் மட்டும் கொண்டுவந்தாள். நான் சொன்னது காதில் விழவில்லை என நினைத்து மீண்டும் சொன்னேன். அவள் நான் சொன்னதை காதில் வாங்கியவளாக ஏன் நான் இருப்பதையே உணரவில்லை. திடிரென எனக்கு சந்தேகம் வர, என் வீட்டு கண்ணாடியில் என்னை பார்க்கிறேன்.. I did not "saw me".......................


Saturday, March 23, 2013

அடுத்தது என்ன???

எங்கள் வாழ்க்கை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நன்றாகவே போய்க்கொண்டு இருந்தது, அந்த நாள் வரும் வரை... திடீரென எங்கள் உலகம் ஒரு பெரிய கிரகத்தை நோக்கி சென்றது     இல்லை... இல்லை.., அந்த மாபெரும் கிரகம் எங்கள் உலகத்தை தன்பால் இழுத்தது.

எங்கள் உலகம் அந்த கிரகத்தை நெருங்க நெருங்க.. எங்கள் உலகம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. நாங்கள் எல்லாம் குகைகளை நோக்கி ஓடினோம். குகைகளுக்குள் வர முடியாதவர்களின் மரண ஓலம் என் காதுகளுக்குள் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

எங்கள் உலகம் அந்த கிரகத்தின் மேல் மோதியது.

டமால் ..........





நான் மெல்ல கண் விழித்துப் பார்க்கிறேன். எங்கள் உலகம் சிதறுண்டு கிடக்கிறது. அந்த கிரகத்து உயிரினங்கள் தங்களுக்குள் பேசுவதிலிருந்து, எங்கள் உலகம் மோதியது, "ரஷ்யா" என்னும் நாட்டிலுள்ள ஒரு தாமிர தொழிற்சாலையின் மேற்கூரையின் மீது என்றும் தெரிகிறது.

அடுத்தது என்ன???..............