Thursday, March 20, 2025

அழைப்பு மணி

அந்த வானியல் இயற்பியலாளர்(Astrophysicist) தனியாக தான் கண்டுபிடித்த உபகரணம்(device) வழியாக, மற்றொரு பரிமாணத்தில்(dimension) உள்ள ஒரு கட்டடத்தை முதல்முறையாக பார்த்தார். அதை தன் மேலதிகாரியிடம் சொல்வதற்காக கைப்பேசியில் அழைக்க முனைந்தார். அக்கட்டடத்தின் உள்ளே அலை முடக்கும் கருவி(signal jammer) இருந்ததால், கதவை பூட்டிவிட்டு வெளியில் வந்து கைப்பேசியில் அவ்வதிகாரியை அழைத்து "நான் இன்று மற்றொரு பரிமாணத்தை முதல் முறையாக பார்த்துவிட்டேன். அங்குள்ள ஒரு கட்டடத்தை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது. அது நம்முடைய கட்டடம் போலவே இருந்தது" என்றார் உணர்ச்சி பொங்க.

அவர் பூட்டிய அந்த கட்டடத்தின் அழைப்பு மணி(Calling bell) ஒலித்தது. அவர் திரும்பி பார்த்தால் அங்கு யாருமே இல்லை..    

அந்த வானியல் இயற்பியலாளர் தனியாக தான் கண்டுபிடித்த உபகரணம் வழியாக, மற்றொரு பரிமாணத்தில் உள்ள ஒரு கட்டடத்தை முதல்முறையாக பார்த்தார். அதை தன் மேலதிகாரியிடம் சொல்வதற்காக கைப்பேசியில் அழைக்க முனைந்தார். அக்கட்டடத்தின் உள்ளே அலை முடக்கும் கருவி இருந்ததால், கதவை பூட்டிவிட்டு வெளியில் வந்து கைப்பேசியில் அவ்வதிகாரியை அழைத்து "நான் இன்று மற்றொரு பரிமாணத்தை முதல் முறையாக பார்த்துவிட்டேன். அங்குள்ள ஒரு கட்டடத்தை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது. அது நம்முடைய கட்டடம் போலவே இருந்தது. மேலும் அதன் அழைப்பு மணியை நான் அழுத்திவிட்டேன்" என்றார் உணர்ச்சி பொங்க.



No comments: